சென்னை:
திமுக மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியை திணிப்பதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்றும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என்றும் தெரிவித்தார். இந்தியை விரும்புபவர்கள் படிக்கலாம், ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.