இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவானேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்துப் புதிய தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் நரவானே பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
பொறியாளர் பிரிவில் இருந்து ராணுவத் தளபதி பதவிக்கு வந்த முதல் ஆள் என்கிற பெருமையையும் மனோஜ் பாண்டே பெற்றுள்ளார். புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயின்ற இவர் 1982ஆம் ஆண்டு ராணுவப் பொறியாளர் பிரிவில் பணியில் சேர்ந்தார். தளபதி பதவிக்கு வருமுன் ராணுவத்தின் கிழக்குப் பிரிவுக்குத் தலைவராக இருந்தார்.