பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பங்கேற்புடன் இராணுவ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற இராணுவ தலைமையகத்தில் சேவையாற்றும் முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் சூரியன் மறையும் வேளையில் நோன்பு திறக்கும் இப்தார் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
உலக அளவில் முஸ்லீம்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை முன்னிட்டு இராணுவ முஸ்லீம் சங்கத்தினால் இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக அமைந்திருந்ததோடு, இதன்போது நாடு செழிப்புற வேண்டி ஆசிர்வாதங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
சில வருடங்களுக்கு முன்பாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தின் நிறைவேற்று அதிகாரியாக நியமனம் வகித்த காலப்பகுதியில் இராணுவத்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவதற்காக “இப்தார்” தின நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இவ்விழாவில் கலந்து கொண்ட மௌலவிகள் (மதகுருமார்கள்) இராணுவத்தினரை பாராட்டியதோடு, இது அனைத்திலும் மிகச் சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் நடந்ததாகக் கூறினர். “இராணுவத் தளபதி மற்றும் படையினர் யுத்த காலங்களில் ஈடு இணையற்ற சேவையை வழங்கினர், மேலும் மிக சமீபத்திய கொவிட் -19 தொற்றுநோய்களின் போது அவர்களது ஆதரவு சரியான நேரத்தில் முறையாக கிடைக்காவிட்டால், நாங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவோம். இராணுவத்தின் பாத்திரங்களுக்காக பாராட்டப்பட வேண்டும், ”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை பிரிகேடியர் அஸ்கர் முத்தலிப் அவர்கள் நடாத்தினார். மௌலவி, வண. மொஹமட் இர்ஸாத் மற்றும் மௌலவி, வண. சப்ராஸ் இக்பால் ஆகியோர் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஆற்றிய இரண்டு சுருக்கமான உரைகளில் ‘இப்தார்’ சடங்கு என்றால் என்ன என்பதையும், வாழ்க்கை நடத்துவதற்கான அதன் அர்த்தத்தையும் விளக்கினர.
இப்தார் நோன்பு திறப்பதற்கான தொழுகைக்குப் பின்னர் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, இராணுவத் தளபதி, இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ முஸ்லீம்கள் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் அஸ்கர் முத்தலிப் மற்றும் பங்குபற்றியோர் நடைமுறையை அடையாளப்படுத்தும் சிற்றுண்டி விருந்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இவ் வைபவத்தின் போது ‘இப்தார்’ சடங்குகளை நடாத்திய இரு மௌலவிகளுக்கும் இராணுவத் தளபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்ப்பட்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் லெப்டினன்ட் கேணல் ஜே.கே ஜலால் நன்றியுரை ஆற்றினார்.
இராணுவ சேவை திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உபதலைவி திருமதி ஜானகி லியனகே, இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிமார் சிப்பாய்கள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவம்