இலங்கைக்கு இந்தியா 760 டன் எடையுள்ள பல்வேறு மருந்துகளை வழங்கி உதவியுள்ளது
இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசியமான மருந்துகளை விரைந்து வழங்கி உதவுமாறு இந்தியாவை இலங்கை அரசு மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டது.
இதன்படி இந்திய கடற்படை கப்பல் மூலம் 760 டன் மருந்துகள் கொழும்பு கொண்டு செல்லப்பட்டன. அம்மருந்துகளை இந்திய தூதர் கோபால் பாக்ரே, இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமனாவிடம் ஒப்படைத்தார். இம்மருந்துகள் இலங்கை மக்களுக்கு இந்திய மக்கள் அளிக்கும் பரிசு என இந்திய தூதர் குறிப்பிட்டார். ஏற்கனவே அரிசி, பெட்ரோலிய பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இலங்கை மக்களுக்கு உதவ தயார் நிலையில் தமிழ்நாடு அரசு: அனுமதிகோரி பேரவையில் தீர்மானம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM