பங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று பிற்பகல் வந்த விமானத்தில் நடுவானில் வைத்து மஹிந்த, பசில், கோட்டாபய உள்ளிட்டவர்களை கேளி செய்யும் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
அதில் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள், கப்புட்டு கா கா கா என பாடலாக பாடியுள்ளனர்.
விசேடமாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோட்டாபயவை ஜனாதிபதியாக்குவதற்காக விசேட விமானம் மூலம் இலங்கை வந்த குழுவினரே அந்த விமானத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டை காக்கும் வீரர்கள் என வெளிநாட்டில் பணியாற்றும் மக்கள் அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் நாடு திரும்பும் போது இவ்வாறு இடம்பெறும் சம்பவம் தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.