ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் காரணமாக உலகளாவிய தேவை உள்ளிட்ட காரணங்களால் கோதுமை ஏற்றுமதி சந்தையாக இந்தியா மாறியதை அடுத்து, விவசாயிகள் பெரும் வருவாயை ஈட்டி வருகின்றனர்.
அரசு கொள்முதல் நிலையங்களை தவிர்த்து விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை நேரடியாக வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் வியாபாரிகள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை காட்டிலும் அதிக விலைக்கு கொள்முதல் செய்ய தயாராக உள்ளதால் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக வருவாயை ஈட்ட விவசாயிகளுக்கு உதவுகின்றன.
இதனால் மாநில அரசின் கொள்முதல் நிலையங்கள் மீதான அழுத்தம் குறைந்து கடன் வாங்கும் நிலை மற்றும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி சுமையை குறைக்கின்றன. மேலும் கடந்த இரு மாதங்களில் 70 லட்சத்து 85 ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதி ஆனதாகவும் கடந்த ஆண்டை காட்டிலும் 275 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.