கீவ் நகருக்குள் நுழைந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் கைது செய்து அழைத்து செல்ல ரஷ்யப் படையினர் முயன்றதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், போர் தொடங்கிய நாள் அன்று தானும் தனது மனைவி ஒலேனாவும், தங்களது 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை எழுப்பி, குண்டு வெடிப்பு தொடங்கியதாக அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார். தான் ரஷ்யாவின் இலக்கு என்பதால் அதிபர் மாளிகை பாதுகாப்பான இடம் அல்ல என்பது தெளிவாக தெரிந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், தன்னையும், குடும்பத்தினரையும் கொல்வதற்கோ அல்லது பிடிப்பதற்கோ ரஷ்ய தாக்குதல் படை வீரர்கள் கிவ் நகருக்குள் பாராசூட் மூலம் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.