மும்பை:
ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களம் இறங்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் துவக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னுடன் வெளியேறினார். இஷான் கிஷன் 26 ரன்கள் அடித்தார்.
39 பந்துகளில் 51 ரன்கள் அடித்த சூரியகுமார், சாகல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 35 ரன்கள் அடித்தார்.
மும்பை அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்…
மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்