தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 29-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கர்நாடகாவில் தொடங்கியிருக்கும் இந்திப் போராட்டம்… தென்னிந்தியா முழுக்க பரவுகிறதா இந்தி எதிர்ப்புணர்வு?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Advice Avvaiyar
பிடிக்காத ஒன்றைத் திணிக்கும் போது எதிர்ப்பது நடக்கக் கூடியது. முன் இல்லாத அளவிற்கு, தீவிரமாகி இருக்கும் மர்மம் தான் புரியாத புதிரா இருக்கு.பிடிக்காத, விரும்பாத திணிப்பை திட்டமிட்டுச் செய்து என்ன சாதிக்கப் போறாங்க?தமிழ் பொது மொழி,அதைப் பேசி கற்கனும் என்றால் ஏற்றுக் கொள்வார்களா? எதிர்ப்பு வரும் எதுவுமே என்றும் ஜெயிக்காதெனத் தெரிந்தும் ஏனிந்த முயற்சி?ஓரிரு வரிபேசி அவர்கள் அமைதியாக இருக்க,பலர்போராடிக் குரல் தர வேண்டியிருக்கு.நிச்சயம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும். கசப்பு மருந்து வேண்டாம் என்றால் துப்பி விடுவது தானே நடப்பது? வேண்டாம்னா வேண்டாம்.அவ்வளவு தான்
Dumil Domal
கர்நாடகாவில் இந்தி பேசுபவர்கள் அதிகம் . எதிர்ப்பு அரசியல் பன்ன இது ஒரு தொடுப்பு எதிர் கட்சிகளுக்கு,, இந்திய யாரும் தினிக்கவுமில்லை,
Prakash K Akash
ஒரே ஒரு படம்… டோட்டல் இந்தியாவும் க்ளோஸ்
Nellai D Muthuselvam
இந்தி எதிர்ப்பாளர்களே இந்தி பள்ளிகூடங்களை நடத்துகிறார்கள்.
தென் மாநிலத்தில் தமிழகம் தான் இந்தியை அதிகம் தேர்வு செய்கிறார்கள் என சென்னையில் உள்ள இந்தி பிரச்சார சபா சொல்கிறது
இதில் இந்தியை தென்மாநிலங்கள் எதிர்ப்பதாக சொன்னால் யார் நம்புவார்கள்.
இந்தியை பள்ளிகளில் கற்று கொடுத்து விட்டு இந்தி எதிர்ப்பு நாடகமா.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை நடுத்தர மாணவர்களை தவிர தென்மாநிலங்களில் இந்தி ஏற்கபட்டுவிட்டது. அண்டை மாநிலங்களில் இந்தி கற்று கொடுக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகம் , பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் அண்டை மாநிலத்தவர்கள் பெரும்பாலும் அந்தந்த மாநில அரசு பள்ளிகளில் இந்தி கற்று சேர்ந்தவர்கள்.
இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களை விட தெலுங்கர்கள் சிறப்பாக இந்தியை எழுதுவதாக சொல்கிறார்கள்.
தமிழகத்தில் அரசியலுக்காக அப்பாவி ஏழை , நடுத்தர மாணவர்களுக்கு இந்தி மறுக்கப்பட்டு வருகிறது. ஏழை, நடுத்தர மாணவர்கள் எல்லாம் மத்திய அரசு பணிகள் இனி மலை போன்று ஆகிவிட்டது.
Kaviyanandh K
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிா்ப்பு என்றும் நிலையாக இருக்கும் தென்னிந்திய மாநிலங்களின் தாய் வீடு தமிழ்நாடு தாய் வீடு என்ன கொள்கையை கொண்டிருக்கிறேதோ அதை தான் கேரளா , ஆந்திரா , கா்நாடகா , தெலுங்கானா , புதுவை பின்பற்றும் ஏனெனில் என்றுமே இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் …Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM