கடந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் மதக்கலவரம் நடைபெறவில்லை : ஐரோப்பிய நாடுகள் குழுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில், மிகப் பெரிய அளவில் மதக்கலவரம் நடைபெறவில்லை என்று ஐரோப்பிய நாடுகள் குழுவிடம், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த6 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர், மனித உரிமைகளுக்கான பிரதிநிதி எமான் கில்மோர் மற்றும் இந்தியாவுக்கான ஐரோப்பிய நாடுகளின் தூதர் உகோ அஸ்டுடோ ஆகியோர் தலைமையில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், இந்தியாவில் மனித உரிமைகள் நிலவரம், சிறுபான்மையினர் நிலவரம் குறித்தும் அவர்களுக்கு எதிரான வெறுப்பு அதிரித்து வருவதாகவும், சமீபத்தில் நடந்த கலவரங்கள் குறித்தும் தங்கள் கவலையை தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய அமைச்சர்முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளின் குழு என்னை சந்தித்தது. அனைத்து சமுதாயத்தினரின் சமூக பொரு ளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து அவர்களிடம் விரிவாக விளக்கினேன்.

சிறுபான்மையினருக்கு எதிரானமத கலவரம் குறித்தும் அவர்கள்கவலை தெரிவித்தனர். ஆனால்,இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மதக்கலவர சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை நான் ஆதாரங்களுடன் விளக்கினேன். ஒரு சில இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால், இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக மதம், ஜாதி போன்ற பாகுபாடின்றி, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பிரதமர் மோடிக்கும், நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவ தற்காக, பல குற்ற சம்பவங்களுக்கு, சிலரின் சதித் திட்டத்தால் மதச் சாயம் பூசப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒரு மதக் கலவரம் கூட இந்தியாவில் நடைபெறவில்லை.

அரசியல் சாசனத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் உள்ளது. ஆனால் முறைகேடான வழியில் நடைபெறும் மதமாற் றங்கள் மீது நடவடிக்கை எடுக்கஅரசுக்கு அழுத்தம் கொடுக்கப் படுகிறது.

இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் குழுவிடம் விளக்கியதாக முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.