கனடாவில் உள்ள ராணுவ கல்லூரில் 4 மாணவர்கள் காருடன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒண்டாரியோ, கிங்ஸ்டனில் உள்ள ராயல் ராணுவ கல்லூரி வளாகத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்ததாகவும், சம்பவம் குறித்து கனடாவின் தேசிய விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கனேடிய தேசிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் ஜாக் ஹோகார்ட், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் ஆகிய 4 ராணுவயிற்சி மாணவ அதிகாரிகள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்த கார், கல்லூரில் வளாகத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியதில் 4 பேரும் உயிரிழந்ததாக கல்லூரி பயிற்சி தளபதி ஜோசி கர்ட்ஸ் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் களமிறங்கிய ரஷ்யர்கள் படை! வீடியோ ஆதாரம்
புலனாய்வாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று சம்பவயிடத்தில் ஆய்வு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல், மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அதிகாரிகளால் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்டது என்று சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
4 ராணுவபயிற்சி மாணவர்கள் மறைவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.