குஜராத் துறைமுகத்தில் ரூ.450 கோடி மதிப்புள்ள ஹெராயினில் ஊறவைக்கப்பட்ட நூல் கட்டுகள் பறிமுதல்

குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும்  வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கண்டெய்னரில் இருந்து ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறியதாவது:-

ஈரானில் இருந்து பிபாவாவ் துறைமுகத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பு கப்பல் வந்தது. அங்கு சந்தேகத்திற்கு இடமான நான்கு பைகளில் சுமார் 395 கிலோ எடையுள்ள நூல்கள் இருந்ததை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் ஹெராயின் என்கிற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அந்த நூல்களில் இருந்து ரூ.450 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட 90 கிலோ ஹெராயின் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தை அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, ஹெராயின் உள்ள கரைசலில் நூல்களை ஊறவைத்து, பின்னர் உலர்த்தப்பட்டு நூல் கட்டுகளாக உருவாக்கி ஏற்றுமதிக்கான பைகளில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெராயின் நூல் கட்டுகளை சாதாரண நூல் கட்டுகளைக் கொண்ட பிற பைகளுடன் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985-ன் விதிகளின் கீழ் டிஆர்ஐ மூலம் ஆய்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.