கேலோ டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டி அண்ணா, எஸ்.ஆர்.எம்., பல்கலை மோதல்| Dinamalar

பெங்களூரு:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், டென்னிஸ் ஆடவர் பிரிவில், தமிழகத்தின் அண்ணா பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.
பெங்களூரில், இரண்டாவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஜெயின் விளையாட்டு பள்ளியில், டென்னிஸ் ஆடவர் பிரிவு அரை இறுதி போட்டி, நேற்று நடந்தது. தமிழகத்தின் அண்ணா பல்கலை வீரரும், தெலங்கானாவின் ஒஸ்மானியா பல்கலை வீரரும் மோதினர்.
தொடக்கத்திலிருந்தே, அண்ணா பல்கலை வீரர் அபாரமாக விளையாடினார். இடையில் ஒஸ்மானியா பல்கலை வீரர் சற்று நன்றாக விளையாட முயற்சித்தார். இறுதியில் 2:1 என்ற கணக்கில், அண்ணா பல்கலை வீரர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரரும், குஜராத் பல்கலை வீரரும் மோதினர். முதல் இரண்டு சுற்றிலும் எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் 2:0 கணக்கில் சிறப்பாக விளையாடினார். இதனால், நேராக இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதே ஜெயின் விளையாட்டு மைதானத்தில், இன்று பிற்பகல் 12:30 மணிக்கு இறுதி போட்டி நடக்கிறது. இதில், தமிழகத்தின் அண்ணா பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை நேருக்கு நேர் மோதுகின்றன.இதனால், பதக்கம் வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு, போட்டியாளர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.