திருவண்ணாமலை அருகே நடந்த வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை – செங்கம் அருகே டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காவேரிப்பட்டணத்தில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சென்ற டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சற்றுமுன் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.