சாய் பல்லவிக்கு திருமணமா? – பரவும் செய்தி
தமிழில் மாரி 2 , என்ஜிகே போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி கடந்த ஆண்டில் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய லவ் ஸ்டோரி மற்றும் நானியுடன் சியாம் சிங்க ராய் என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்தார். அதையடுத்து சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பதற்கு போலா சங்கர் என்ற பட வாய்ப்பு வந்தபோது அதை நிராகரித்துவிட்டார் சாய்பல்லவி. இதுவரை எந்த புதிய படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை.
இதுகுறித்து சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் தெலுங்கு சினிமா ரசிகர் மத்தியில் எனக்கென்று நல்லதொரு இமேஜ் இருந்து வருகிறது. சாய் பல்லவி என்றால் திருப்திகரமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
இந்த நேரத்தில் டோலிவுட்டில் சாய் பல்லவி திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், அதனால் தான் புதிய பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை என்கிற ஒரு வதந்தியும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.