இளவரசர் சார்லஸ் மன்னாராகப் பதவியேற்கும்போது, அவரது பதவியேற்பு விழாவில் அவரது மகனான இளவரசர் ஹரி கலந்துகொள்ளமாட்டார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஹரியின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது சமீப காலமாக ஹரியும் மேகனும் சுயசரிதைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், வரும் அக்டோபர் மாதம் ஹரி ஒரு புத்தகத்தை வெளியிட இருக்கிறாராம். அந்த புத்தகத்தில், தன் தாயைக் குறித்த நினைவுகள், தன் பெற்றோரின் திருமணம் முறிந்தது ஆகிய விடயங்களை மையப்படுத்தியுள்ளாராம் ஹரி.
அதே நேரத்தில், தன் தந்தையின் தற்போதைய மனைவியான கமீலாவை அவர் குறிவைத்துள்ளதாகவும் அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் சார்லசின் மனைவியாகிய கமீலாவை மோசமானவராக தனது புத்தகத்தில் ஹரி காட்ட இருப்பதாக அவரது நண்பர் தெரிவித்துள்ள நிலையில், இந்த செய்தி நிச்சயம் ராஜ குடும்பத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.