சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் புதிதாக ஆயிரத்து 410 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஒரே நாளில் நோய்த்தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெய்ஜிங்கிலும் பாதிப்பு சற்று அதிகரித்திருக்கும் நிலையில், மறு உத்தரவு வரும் அங்கு வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளாது.