மே மாதம் 2ஆம் திகதியன்று, சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.
இந்த தகவலை சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
2022 மே 2 முதல், சுவிட்சர்லாந்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும் வழக்கம்போல, சாதாரண விசா கட்டுப்பாடுகளை மட்டுமே சந்திக்க இருக்கிறார்கள்.
அதாவது, Schengen பகுதிக்கு வெளியே வாழும் மக்கள், அதவது சுவிஸ் குடியுரிமையோ, அல்லது சுவிஸ் வாழிட உரிமமோ இல்லாதவர்கள், உதாரணமாக அமெரிக்கக் குடிமக்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் தடுப்பூசி பெறாமல் இருந்தாலோ, அல்லது கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து விடுபடாமல் இருந்தாலோ, அவர்கள் தற்போது அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் பயணிக்க முடியாது.
ஆனால், மே 2ஆம் திகதி முதல், அத்தகையக் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையலாம் என சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.