திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
“சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.இது தொடர்பாக காவல்துறையினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்.
சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல்துறையினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 29, 2022
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று வெறுமனே எழுதிவைத்தால் மட்டும் போதாது. சட்டத்தை அவர்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்படாமல் உரிய விதிமுறைகளை பின்பற்றியே விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இனி, இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறக்கூடாது”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.