இந்த மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் முதலில் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் என்றால் என்ன? நம் உடலுக்கு பயிற்சி கொடுக்கக் கூடிய ஓரிடம்.
அங்கு நீங்கள் என்ன விதமான பயிற்சி உங்கள் உடலுக்கு கொடுக்க போகிறீர்கள்? பெரும்பாலானவர்கள் ஜிம் சென்று அதிக எடையைத் தூக்குவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.
சில பேர் உடல் வலிமையைக் கூட்டவும், உடலை இலகுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளவும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உடற்பயிற்சிக் கூடத்தில் கூட நீங்கள் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்கள் யோகாப் பயிற்சியை தனியாகவும் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜிம் டிரைனர் சதீஷ்.
அவர் மேலும் கூறியதாவது:
ஒரு வாரத்தில் மொத்தம் 7 நாள்கள் நமக்கு இருக்கிறது. அதில் 3 நாள்கள் உடற்பயிற்சிகளையும், 2 நாள்கள் யோகப் பயிற்சியையும், ஒரு நாள் தியானமும் செய்ய ஒதுக்கலாம்.
உங்கள் உடலுக்கு நீங்கள் எல்லாவிதப் பயிற்சிகளையும் கொடுக்கலாம். ஜிம் சென்றால் யோகா பயிற்சி மையத்துக்குச் செல்லக் கூடாது என்றெல்லாம் எந்த விதிமுறையும் கிடையாது.
இந்த வசதிகளெல்லாம் உள்ள ஜிம்முக்குச் சென்றால் நீங்கள் எல்லாவற்றையும் கூட கற்றுக் கொள்ளலாம். கல்லூரி மாணவர்களாக/மாணவிகளாக இருக்கும்போதே முடித்தவரை எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு, வேலைக்குச் செல்வதற்கும் குடும்பத்தைப் பார்ப்பதற்கும் மட்டுமே நேரம் செலவாகிவிடும்.
எந்தப் பயிற்சியை செய்தாலும் உடல் இயக்கமே பிரதானமாக இருக்கும். அத்துடன் ஆரோக்கியமான உணவு சேர்ந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“