ஜிம் ஷூட்டில் ரேஷ்மா பசுபலேட்டி
நடிகை ரேஷ்மா பசுபலேட்டி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். சினிமாவில் இவர் நடித்த புஷ்பா என்கிற கவர்ச்சி கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது. எனினும் அவருக்கு சின்னத்திரை தான் பட்டுக்கம்பளம் விரித்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டும் ரேஷ்மாவும் அசத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி பிட்னஸ் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜிம் ஷூட்டில் மேக்கப் இன்றி ஹாட்டான புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் இவரை 'கவர்ச்சி கன்னிவெடி' என செல்லமாக அழைத்து வருகின்றனர்.