மும்பை:
15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடினார்.
தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.