டிவியில் மே தின சிறப்பு திரைப்படங்கள்
மே தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் வழக்கம்போல மே தின சிறப்பு திரைப்படங்களை சேனல்கள் ஒளிபரப்புகிறது. ஜீ தமிழ் சேனல் அஜித், ஹீமா குரேஷி நடித்த வலிமை படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. அஜித் படத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக முன்னணி தொலைக்காட்சி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. இதுதவிர காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், ஒரு மணிக்கு அஜித் நடித்த வீரம், 4 மணிக்கு கார்த்தி நடித்த கொம்பன், இரவு 10 மணிக்கு சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தையும் ஒளிபரப்புகிறது. விஜய் டிவியில் சிம்பு நடித்த மாநாடு படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் தமிழ் சேனல் மாலை 4.30 மணிக்கு சமுத்திரகனி நடித்த ரைட்டர் படத்தை ஒளிபரப்புகிறது.