வேலூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்க அதிகரித்துள்ள நிலையில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
வேலூரில் இன்று காலையிலிருந்தே நகரம் முழுவதும் அனல் காற்று வீசியதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், நெடுஞ்சாலைகளிலும் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன போட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வருகின்ற மே 4ஆம் தேதி முதல், அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.