நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வழிப்பறி கொலை மற்றும் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன அடங்குகின்றன.
யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு கொள்கலனை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு கொள்கலன் மற்றும் அவரது பணத்தையும் நால்வர் கொள்ளையிட்டுத் தப்பித்த சென்றுள்ளனர்.
மேலும் தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் யாசகரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானதோடு தனமல்வில வாரச் சந்தை வளாகத்தில் நபர் ஒருவர் நேற்று கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் தொடர்பான விரிவான தகவல்களை எமது குற்றப் பார்வை தொகுப்பில் காணலாம்.