‘தெய்வ மகள்’ சீரியல் ரீமேக்: சன் டி.வி- விகடன் இடையே என்ன பிரச்னை?

Suntv Vs Vikatan Tv Update : தனது தயாரிப்பில் வெளியான சீரியலை அனுமதி இன்றி மற்ற மொழியில் ரீமேக் செய்த சன்டிவி நிறுவனம் மீது விகடன் டிவி நிறுவனம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

சன்டிவியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தெய்வமகள். வாணி போஜன், ரேகா கிருஷ்ணப்பா, கிருஷ்ணா வென்னிற நிர்மலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியல் வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1466 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. சுமார் 5 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும் இதில் பாதி தொகையாக 50 கோடி, சன்டிவியின் ஒளிபரப்பு கட்டணமாக செலுத்தப்பட்டதாகவும் விகடன் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விகடன் நிறுவனமும் சன் நெட்வொர்க் நிறுவனமும் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது தெய்வமகள் சீரியலை எவ்வித உரிமையும் பெறாமல், டெபி என்ற பெயரில் பெங்காலி மொழியில் ரீமெக் செய்து சன் பங்களா சேனலில் ஒளிபரப்பி வருவதாக விகடன் நிறுவனம் கூறியுள்ளர்.

அடிப்படை கதையை எடுத்துக்கொண்டு கேரக்டர்களின் பெயர்களை மட்டும் மாற்றம் செய்து இந்த ரீமேக் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை மொத்தம் 144 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சன்டிவியின் இந்த செயல் சட்டப்பூர்வ விதிகளை மீறுவதாக கூறியுள்ள விகடன் நிறுவனம், எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்களை மேற்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்ட உறுதிமொழியுடன்,  ரூ.100 கோடி இழப்பீடு கோரியுள்ளது.

ஆனந்த விகடன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்டிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்க வேண்டும் என்று கேரியுள்ள விகடன் நிறுவனம், இதற்கு சன்டிவி மறுத்தால், “இந்த நிலைமையைச் சரிசெய்வதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொளளப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.