தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாதாத்ரி மாவட்டத்தில் சுமார் 35 ஆண்டுகள் பழைமையான இரண்டு மாடி கட்டிடம் இருந்தது.
இந்த கட்டிடத்தின் கீழே கூரை போல ஷெட் அமைத்து கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உறுதித் தன்மை இழந்திருந்த அந்த கட்டிடத்தின் மேல் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து கூரை மீது விழுந்தது.
இதில், 4 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பெண் குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சாலை விரிவாக்கத்திற்காக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட நிலையில், மற்ற பகுதிகளும் உறுதித் தன்மையை இழந்திருந்துள்ளது.
இதனை அதிகாரிகள் கவனிக்காததால், கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.