இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரன், தொடர்புடைய பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ஜாக்குலினுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள குதிரை உள்ளிட்ட 5 கோடிக்கு ரூபாய்க்கு மேல் பரிசுகளை சுகேஷ் வழங்கியதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
மோசடி செய்த பணத்தில் ஜாக்குலினுக்கு, பரிசுகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து, அவரது சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.