நான் பாதுகாப்பாக இருப்பேனா? ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய வீரர் கேள்வி!


ரஷ்ய முன்னெடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானிய தன்னார்வல வீரர் ஆண்ட்ரூ ஹில் ரஷ்ய படைகளால நேற்று சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் உக்ரைனில் ரஷ்யா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், தற்போது இந்த போரானது 66வது நாளாக இன்றும் நடைப்பெற்று வருகிறது.

இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவதற்காக சென்ற பிரித்தானிய நாட்டை சேர்ந்த தன்னார்வலர் ஆண்ட்ரூ ஹில்(Andrew Hill) என்பவரை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து அவருடன் ரஷ்ய ராணுவம் உறையாடும் வீடியோ பதிவு ஒன்றை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிகிழமை வெளியிட்டுள்ளது.

அதில், ஆண்ட்ரூ ஹில்லின் இடது கை மற்றும் தலையில் பலத்த காயத்திற்கான கட்டுப் போடப்பட்டு இருப்பதுடன் அவரது வலது கையில் இரத்தம் கசிந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வீடியோவில், ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் பிரித்தானிய தன்னார்வலர், தனது பெயர் ஆண்ட்ரூ ஹில் என்றும், தான் தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிரித்தானிய ராணுவத்தில் அவருடைய rank குறித்து ரஷ்ய ராணுவ வீரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரூ ஹில், தான் பிரித்தானியாவில் எந்த ராணுவ பதவியிலும் இல்லை என்றும், தன்னார்வலராக தான் இந்த போரில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆண்ட்ரூ ஹில் நான் இங்கு பாதுகாப்பாக இருப்பேனா என்று கேட்டதற்கு பதிலளித்த ரஷ்ய ராணுவ வீரர் “ஆம் நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.” என தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவ வீரர் பிடிபட்டதற்கு பிரித்தானிய வெளியுறவுத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.

கூடுதல் செய்திகளுக்கு: 50 ஆண்டுகள் பழமையான வரைப்படம்: உக்ரைனில் குழம்பி நிற்கும் ரஷ்ய வீரர்கள்!

மேலும் ஆண்ட்ரூ ஹில்லை தென்மேற்கு உக்ரைனின் மைகோலேவ் பகுதியில் வைத்து சிறைப்பிடித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.