புதுடில்லி: ‘நீட்’ தேர்வுக்கு, 11 லட்சம் மாணவர்களும்; ‘கியூட்’ தேர்வுக்கு, 4.7 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, நேற்று முன்தினம் நிலவரப்படி, 11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 17 லட்சத்தை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேபோல், நாட்டில் உள்ள 72 மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வையும், தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.முதல் முறையாக நடக்க இருக்கும் இந்த கியூட் தேர்வை எழுத, இதுவரை, 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடில்லி: ‘நீட்’ தேர்வுக்கு, 11 லட்சம் மாணவர்களும்; ‘கியூட்’ தேர்வுக்கு, 4.7 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.நாட்டில், இளநிலை மருத்துவ படிப்பில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.