ஓசூர் அருகே ஏரியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை. பெண்சிசுக் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குழந்தையின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மத்திகிரி போலீசார், ஏரியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை இருந்ததை உறுதி செய்தனர்.
இந்நிலையில், பெண் குழந்தையின் தொப்பில் கிளிப் கூட கழற்றப்படாத நிலையில், உடல் வீங்கி இருந்தது, பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெண் குழந்தை என்பதற்காக ஏரியில் வீசி கொல்லப்பட்டிருக்குமா? அல்லது இறந்த குழந்தையை ஏரியில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM