அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் கருக்கலைப்பு தடைக்கு வாதிட்டு வந்த நிலையில் பலாத்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பாக அமையும் என தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஜீன் ஷ்மிட் என்பவரே இள வயதில் பலாத்காரத்திற்கு இலக்காகும் பெண்கள் நல்ல தாயாக மாற அது ஒரு வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.
70 வயதான ஜீன் ஷ்மிட்டின் இந்த கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள வைத்தது. மட்டுமின்றி சமூக ஊடகங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சமூக ஆர்வலர் ஒருவர், இது இழிவான கருத்து என சாடியுள்ளார்.
ஆனால் ஜீன் ஷ்மிட் கருக்கலைப்பு எதிர்ப்பாளர் என பெருமைப்படுபவர் மட்டுமின்றி, ஓஹியோவில் கருக்கலைப்பு எதிர்ப்பு மசோதாவை எதிர்த்துப் போராடி வருகிறார்.
மேலும், எந்த காரணங்களாலும் ஓஹியோவில் கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது என ஜீன் ஷ்மிட் வாதிட்டு வருகிறார்.
டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களிலும் கருக்கலைப்புத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவர்களைக் குற்றவாளியாக்கும் கட்டுப்பாட்டுச் சட்டங்களை இயற்றியுள்ளன.
புளோரிடா மாகாண நிர்வாகம் சமீபத்தில் தாய் அல்லது குழந்தைக்கு மருத்துவ ரீதியாக தீங்கு விளைவிக்கும் சந்தர்ப்பங்களை தவிர 15 வார கருக்கலைப்பு தடையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.