புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மருத்துவ படிப்புக்காக பாகிஸ்தானுக்கு இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம். பாகிஸ்தானின் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டினரும், வெளிநாட்டு குடிமகனும், கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தவொரு வகையிலும்) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு (எப்எம்ஜிஇ), தேசிய தகுதி தேர்வில் (நெக்ஸ்ட்) பங்கேற்க அல்லது இந்தியாவில் வேலை தேடவோ தகுதி பெற மாட்டார்கள். டிசம்பர் 2018க்கு முன் அல்லது அதற்குப் பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சக்கத்திடம் அனுமதி பெற்ற பிறகு பாகிஸ்தான் கல்லூரிகளுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.