பொருளாதார சந்தையில் அதிகப் பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி பார்மா துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளார். 173 வருட பழமையான இங்கிலாந்தை சேர்ந்த பார்மா நிறுவனம் பூட்ஸ்.
இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்மா துறையிலும் கால் பதிக்க உள்ளது. அப்போலோ குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்தின் பூட்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது.
பூட்ஸ் நிறுவனத்துக்கு இங்கிலாந்தில் 2,200 ஸ்டோர்கள் உள்ளன. மருந்துகள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை வணிகம் செய்துவரும் பூட்ஸ் நிறுவனத்தை வாங்க இருப்பதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன்னுடைய தொழிலை அடுத்தகட்டத்துக்கு விரிவுபடுத்த உள்ளது.
இதன் மூலம் பூட்ஸ் நிறுவனம் தன்னுடைய வணிகத்தை இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 6.27 பில்லியன் டாலர் முதல் 7.52 பில்லியன் டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.