இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த முகுந்த் நரவனேவின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று, இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக, மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரிவிலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர். பிப்ரவரி 1 ஆம் தேதி, ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பேற்று கொள்வதற்கு முன்பு, சிக்கிமில் இந்திய, சீன ராணுவ எல்லை, அருணாச்சல பிரதேசம் பகுதிகள் அடங்கிய கிழக்கு ராணுவ பிரிவை மனோஜ் பாண்டே தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
இந்திய சீன எல்லை, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில்
இந்திய ராணுவம்
பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், ராணுவத்தின் தலைமை பொறுப்பை மனோஜ் பாண்டே ஏற்றுள்ளார். புதிய ராணுவ தளபதியான மனோஜ் பாண்டேவுக்கு முப்படைகளுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது. பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள மனோஜ் பாண்டே, அந்தமான் நிகோபார் பிரிவின் தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தொடர்ந்து, ராணுவத்தின் புதிய துணை தலைமை தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டு உள்ளாா். இவரும் இன்று பொறுப்பேற்றார்.
ஓய்வு பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ்
முகுந்த் நரவனே
மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர்.
பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” 42 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றி இன்று ஓய்வுபெறும் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனே உடனான அற்புதமான சந்திப்பு. ராணுவத் தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டின் பாதுகாப்புத் திறன்களையும் தயார்நிலையையும் வலுப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.