பெற்றமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு மகள் ஒருவர் இருந்துள்ளார். ஏழு வயதில் இருந்த அந்த சிறுமியின் தந்தை 7 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமை செய்து வந்தார் என கூறப்படுகிறது. இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது அவரை 16 வயது வரை இந்த கொடுமை தொடர்ந்துள்ளது.இந்நிலையில், 2020ம் ஆண்டு தனது பள்ளி தோழிகளிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இதனை அதிர்ச்ச்சியடைந்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து, குழந்தையை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாய்க்கு சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள்தண்டனையும் விதித்து தீர்பளித்தது.