ஜல்னா:
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி மாநில குடும்ப நல அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஜல்னா மாவட்டத்தில் சிலர் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த கருக்கலைப்பு மையத்தில் இருந்து பெண் குழந்தையின் சிசு, மருந்து மாத்திரைகள், கருக்கலைப்பு சாதனங்கள், பதிவேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கருக்கலைப்புக்காக அந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார் வேறு ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மையத்தை நடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் முக்கிய குற்றவாளியான மருத்துவர் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த குற்றவாளிகள் கருக்கலைப்புக்காக ரூ.40,000 வசூலித்து வந்தது தெரியவந்தது.