மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுவாக மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர். மாணவிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் காரணமாக பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து சண்டையிட்டு கொண்ட நிகழ்வு குறித்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
இந்நிலையில் திடீர் நகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM