மாயமான பிரித்தானிய தாயார் தொடர்பில் வெளியான முதல் புகைப்படம்


பிரித்தானியாவில் ஏழு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் தாயாரை
கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏழு நாட்களுக்கு முன்பு தமது வாகனத்தில் சென்ற Katie Kenyon என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் இவரது முன்னாள் காதலர் 50 வயதான Andrew Burfield என்பவரை சந்தேகத்தின் அடிப்படையி;ல் பொலிசார் கைது செய்தனர்.

33 வயதான Katie Kenyon, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை பகல் சுமார் 9.30 மணியளவில் வாகனத்தில் சென்றவர், அதன் பின்னர் மாயமானார்.

Katie Kenyon மரணமடைந்துள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில், சடலத்தை இதுவரை கைப்பற்றவில்லை.

இதனிடையே, Andrew Burfield தொடர்பில் புகைப்படம் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ள பொலிசார், இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2022 நவம்பர் மாதம் துவங்கும் எனவும், அதுவரையில் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.