ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தை முறிவடையும் அபாயத்தில் இருப்பதாக உக்ரைன் எச்சரித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றத் தவறியதை அடுத்து, ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன.
உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது மற்றும் அதன் படைகள் பெரும்பாலும் கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலை ஆக்கிரமித்துள்ளன.
மார்ச் 29 முதல் உக்ரைனும் ரஷ்யாவும் நேருக்கு நேர் அமைதிப் பேச்சுக்களை நடத்தவில்லை, மேலும் ரஷ்ய துருப்புக்கள் அட்டூழியங்களை நடத்தியதாக உக்ரேனிய குற்றச்சாட்டுகளால் சூழ்நிலை மோசமாகிவிட்டது.
எனினும், உக்ரைன் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.
போலந்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
கனடா கல்லூரியில் பயங்கரம்.. 4 ராணுவபயிற்சி மாணவர்கள் மரணம்!
பேச்சுவார்த்தைகள் முறியும் அபாயங்கள் அதிகம் என்று அவர் கூறியதாக Interfax மேற்கோளிட்டுள்ளது.