இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்தாலும், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பல முன்னணி கட்டுமான நிறுவனங்களே விலை உயர்வை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய வீடுகளின் விலையை 10-15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 2022ல் புதிய வீடுகளின் விற்பனை சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2020, 2021ல் அப்படியில்லை, குறிப்பாக ஆடம்பர வீடு விற்பனையில் பல மடங்க வளர்ச்சியைக் கண்டு உள்ளது.
என்னடா டெஸ்லா.. எங்க டாடா இருக்க என்ன கவலை.. புதிய அவின்யா கார்..!
வீட்டுக் கடன் வட்டி
கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்த காரணத்தால் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தாலும், அதிகளவிலான பணத்தை வீட்டில் இருந்து பணியாற்றுவதால் மிச்சப்படுத்த முடிந்த காரணத்தாலும், பல வருட சரிவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இருந்த காரணத்தாலும் புதிய வீடுகளின் விற்பனை சிறப்பான வளர்ச்சி அடைந்தது.
ரியல் எஸ்டேட் துறை
இதேபோல் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய மத்திய மாநில அரசுகள் பல சலுகை அளித்த காரணத்தால் ஆடம்பர வீடுகளின் விற்பனை எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடம்பர வீடுகளுக்குப் பெயர்போன மும்பையில் இருமடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மும்பை
மும்பையில் ரூ.10 கோடிக்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை 2021ல் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.20,255 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020ல் ரூ.9,492 கோடி மதிப்புள்ள சொகுசு வீடுகளின் விற்பனை அடைந்துள்ளது.
சொகுசு வீடுகள்
இந்த எண்ணிக்கை முதன்மை (புதிய விற்பனை) மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளில் (மறு விற்பனை) விற்பனையை உள்ளடக்கியது. மும்பையில் விற்பனை செய்யப்பட்ட சொகுசு வீடுகளின் மொத்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 1,214 யூனிட்டுகளாக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 548 யூனிட்களாக இருந்தது.
முக்கியப் பகுதி
மும்பையில் வொர்லி, லோயர் பரேல், பாந்த்ரா, டார்டியோ, பிரபாதேவி மற்றும் அந்தேரி ஆகியவை முக்கியச் சொகுசு வீடுகள் விற்பனை சந்தைகளாக விளங்குகிறது. ஒட்டுமொத்த மும்பை சொகுசு சந்தையில் 20 சதவீத விற்பனையை வோர்லி மட்டுமே கைப்பற்றியுள்ளது.
Real Estate: Sale of luxury houses jumps 2 fold in mumbai
Real Estate: Sale of luxury houses jumps 2 fold in mumbai ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!