ஜெய்ப்பூர்
ராஜஸ்தானின் பரத்பூர் கமான் பகுதியை சேர்ந்த ஒருவர் அரியானாவை சேர்ந்த பெண்ணை கடண்டஹ் 2019 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டார். தம்பதிகள் ராஜஸ்தானில் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் வரதட்சணை கேட்டு அந்த நபரின் தாயார் அந்த பெண்ணை கொடுமைசெய்து வந்துள்ளார். இதனால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால், கணவர் அவரை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீடு வந்ததும் கணவர் தனது உறவினர்கள் இருவரை வீட்டிற்கு அழைத்து உள்ளார். தனது மனைவியைதன் எதிரில் அவர்களை பலாத்காரம் செய்யுமாறு கூறி உள்ளார். மேலும் அதனை மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு வரதட்சணை கொடுக்க முடியாது, ஆனால் இப்போது இந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்று அதன் மூலம் நான் அந்த தொகையை சம்பாதிப்பேன்” என்று கூறி, ஆபாச வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றி உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பரத்பூர், கமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி தவுலத் சாஹு கூறியதாவது:-
ஒரு பெண் தனது கணவர் மற்றும் இரண்டு உறவினர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார். யூடியூப்பில் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறி உள்ளார். தற்போது, அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-
எனது மாமியார் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்துகின்றார். அவர்களுக்கு வரதட்சணை கொடுக்காததால், உறவினர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், ஐந்து நாட்களுக்கு முன், என்னை கமான் என்ற பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.அங்கிருந்து தப்பி என் வீட்டிற்கு வந்தேன் என கூறினார்.