வாட்ஸ் அப் செயலிக்கு திடீரென என்ன ஆச்சு? மண்டையை பிய்த்து கொண்ட வாடிக்கையாளர்கள்


வாட்ஸ் அப் சேவை பல நாடுகளில் திடீரென இரவு நேரத்தில் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் தவித்து போனார்கள்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.

அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.
வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

WiFi கனெக்‌ஷன் பயன்படுத்துபவரா? இந்த அத்தியாவசிய தகவல் உங்களுக்கு தான்

பின்னர், சேவையில் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், பிரச்னைகளை சீர் செய்துவிட்டதாகவும், இதுவரை பொறுமை காத்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளது.


ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் சாட்டிங் செய்ய முடியாமலும், வீடியோ அழைப்பில் பேச முடியாமலும் பலரும் தவிப்புக்கு ஆளாகினர்.

மேலும் #whatsappdown என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் ட்ரண்ட் செய்யப்பட்டது.
அந்த டேக்கின் கீழ் பலரும் கிண்டலான பதிவுகளை போடுவதையும் காணமுடிந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.