திருச்சி மாவட்டம் முசிறியில் ராணுவ வீரரின் மனைவியின் தாலி பறிப்பு சம்பவத்தில், 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் நீலமேகம், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவியின் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றுவிட்டதாக வீடியோ மூலம் முதலமைச்சர் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்திருந்தார்.
இதனை பார்த்த டிஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.