நாகர்கோவில் : தக்கலை அருகே கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து அதில் குரங்குகள் ஆனந்த குளியல் போட்டன.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரம் மழைக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது.
ஒக்கி புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்த பின்னர் மாவட்டத்தின் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தக்கலை அருகே பத்மனாபபுரம் பகுதியில் இருந்து வந்த குரங்குகள் கூட்டம், இங்குள்ள கவுன்சிலர் ஷிபா வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளின் மூடிகளை கழட்டிய பின்னர் அதன் உள்ளே குதித்து குளியல் போட்டன.குரங்குகள் உள்ளே குதிப்பதும், குளித்து விட்டு மேலே வருவதுமாக இருந்தன. மனிதாபிமான அடிப்படையில் ஷிபாவின் குடும்பத்தினரும் அவற்றின் குளியலை தடுக்கவில்லை. நன்றாக குளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறி மலைப்பகுதிக்கு ஓடின.
நாகர்கோவில் : தக்கலை அருகே கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து அதில் குரங்குகள் ஆனந்த குளியல் போட்டன.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.