வெளிநாட்டில் ஆபாச நடனம்: நாடுகடத்தப்படும் கனேடியர்



இந்தோனேசிய மக்களால் புனிதமாக கருதப்படும் எரிமலை அருகாமையில் நிர்வாணமாக நடனமாடிய குற்றச்சாட்டின் பேரில், வான்கூவர் நபர் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இந்தோனேசிய சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
33 வயதான Jeffrey Douglas Craigen என்பவர் Mount Batur-ல் ஒழுக்கக்கேடான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைதாகியுள்ள கனேடியர் விதி மீறல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது குடியேற்ற நிர்வாக நடவடிக்கை நாடு கடத்தல் வடிவத்தில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த கனேடியர், நியூசிலாந்து மக்களுக்கான பாரம்பரிய நடனத்தை Mount Batur-ல் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொள்ள கோரியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.