ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனங்களுக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்வு மையங்கள் அலகாபாத், மைசூர், ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள்.
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள நகரங்களிலேயே தேர்வு மையங்களை அமைக்க வேண்டுமென கடிதத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இதற்காக சென்னை ரயில்வே நியமன வாரியத்துக்கு உரிய ஆணை பிறப்பிக்குமாறும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM