ரஷ்ய தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாதித்த புடின் பிரச்சாரகர்கள், பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் அணு ஆயுதத்தின் மூலம் வெறும் 200 நொடிகளில் அழிக்கப்படும் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உள்கட்டமைப்பு மீதான உக்ரேனிய தாக்குதல்களை ஆதரித்து பிரித்தானியாவின் ஆயுதப் படை அமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விளாடிமிர் புடின், ஐரோப்பாவில் உள்ள மூன்று தலைநகரங்களில் அணுசக்தித் தாக்குதலை எப்படி நடத்துவார் என்பதை, ‘உயிர் பிழைத்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி துணிச்சலாக உருவகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் சேனல் ஒன்னின் ’60 மினிட்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள், உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அணு ஏவுகணைகள் ஏவப்பட்ட 200 வினாடிகளுக்குள் லண்டன் , பாரிஸ் மற்றும் பெர்லின் நகரங்கள் தாக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.
நேட்டோவின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் ஷெரிப், உக்ரைனில் ரஷ்யாவுடனான ஒரு மோசமான சூழ்நிலையில் போருக்கு மேற்கு நாடுகள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், மே 9 அன்று ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் வெற்றி தின அணிவகுப்பைப் பயன்படுத்தி அண்டை நாடுகள் மீது அணுஆயுதப் போரை அறிவிக்கலாம் என்று அறிக்கைகள் வந்துள்ளன.
சென்ற வியாழனன்று நடந்த நிகழ்ச்சியில், ரஷ்யா பிரித்தானியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை ஏவினால் என்ன நடக்கும் என்று யோசித்து பேசிய தேசியவாத ரோடினா கட்சியின் தலைவர் அலெக்ஸி ஜுராவ்லியோவ், ‘ஒரு Sarmat ஏவுகணை மற்றும் பிரித்தானிய தீவுகள் இனி இருக்காது’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த மற்றொரு தொகுப்பாளர் பிரித்தானியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அப்படி நடந்தால் ‘இந்தப் போரில் யாரும் உயிர்வாழ மாட்டார்கள்’ என்று கூறினார்.
நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு போலந்து, லிதுவேனியா மற்றும் பால்டிக் கடலுக்கு இடையே உள்ள ரஷ்ய நிலப்பகுதியான கலினின்கிராட்டில் இருந்து ஏவுகணைகளை ஏவலாம் என்று பரிந்துரைக்கும் வரைபடத்தை பார்வையாளர்களுக்குக் காண்பித்தனர்.
இவை பெர்லினை 106 வினாடிகளிலும், பாரிஸை 200 வினாடிகளிலும், லண்டனை 202 வினாடிகளிலும் அடையலாம் என்று பரிந்துரைத்தது.
பிரித்தானியா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகின்றன, உபகரணங்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குகின்றன.
ஆனால் உக்ரைனின் மேற்கத்திய ஆதரவிற்கு விடையிறுக்கும் வகையில், புடின், சாத்தான் II என்றும் அழைக்கப்படும் அதன் சர்மாட் ஏவுகணைகளை (SARMAT) சோதிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, கடந்த வாரம் புடின் தனது நாட்டின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அனைத்து நவீன பாதுகாப்புகளையும் உடைத்துக்கொண்டு பிரித்தானியாவை இலையுதிர்காலத்தில் தாக்கத் தயாராக இருக்க முடியும் என்று தற்பெருமை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.