திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில் பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாப்பாக்குடி பகுதியை செல்வ சூர்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே, கையில் ஜாதி ரீதியான கயிறு கட்டுவது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், மாணவர்கள் சாதி ரீதியாக இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். தாக்குதலில், மாணவன் செல்வ சூர்யா காதில் ரத்தம் வந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை மாணவன் செல்வா சூர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தலைமறைவான 3 மாணவர்களை தேடி வந்தனர்.
சற்றுமுன் 12ம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.