Movie Rentals: படங்களை வாடகைக்கு விடும் அமேசான் பிரைம் வீடியோ!

முன்பெல்லாம் படம் பார்ப்பதற்கு நாம் கேசட் அல்லது சிடியை வாடகைக்கு எடுப்போம். ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய அனுபவத்தை அளித்த அந்த தருணங்களை நாம் என்றுமே மறக்க முடியாது. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயம் ஆகி விட்டதால்,
அமேசான்
நிறுவனம் இதே பழைய திட்டத்தினை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தி உள்ளது.

அமேசான்
பிரைம் வீடியோ
ஓடிடி தளத்தில் படம் அல்லது தொடர்களை பார்க்க வேண்டும் என்றால், நாம் மாத சந்தா செலுத்த வேண்டும். சில நபர்களுக்கு குறிப்பிட்ட வீடியோக்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். Amazon இதனை சரியாகப் புரிந்துகொண்டு, புதிய வாடகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தேவைப்படும் குறிப்பிட்ட திரைப்படங்கள் அல்லது தொடர்களை வாடகைக்கு எடுக்க முடியும். இந்த திட்டத்திம் விலை விவரங்கள், எந்தெந்த தொடர்கள் அல்லது படங்களை வாடகைக்கு எடுக்க முடியும் என்பது போன்ற கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Realme Smart TV: ரியல்மி களமிறக்கிய மலிவான பெரிய திரைகள் கொண்ட ஸ்மார்ட் டிவிக்கள்!

அமேசான் பிரைம் வீடியோ வாடகைத் திட்டம்

இந்தச் சேவையானது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்களை வாடகைக்கு எடுக்க பயனர்களை அனுமதிக்கும் என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அமேசானின் முதன்மை வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் இருக்கும் கண்டெண்டுகளை பிற பயனர்களும் அனுபவிக்க முடியும். பிரைம் உறுப்பினர்களாக இல்லாத வாடிக்கையாளர்களுக்கும் வாடகை சேவை கிடைக்கும். இது தற்போது அமேசான் பிரைம் வீடியோ இணையதளத்தில் ஒரு பிரத்யேகப் பிரிவில் கிடைக்கிறது.

புதிய OnePlus டிவி அறிமுகம் – இனி வீட்டிலேயே மினி தியேட்டர் அனுபவம்!

பிரைம் வீடியோ வாடகை திட்டத்தின் விலை

பிரைம் வீடியோவில் அதிரடி, சாகசம், அறிவியல் புனைகதை, திகில், ஆவணப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், நகைச்சுவை, குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படங்கள் உள்பட பல்வேறு வகைகளில் வீடியோக்கள் உள்ளது. இதனை ரூ.99 முதல் ரூ.499 வரையிலான வாடகையில் பயனர்கள் பெற முடியும்.

இது தற்போது The Batman, Spiderman No Way Home, Matrix Resurrections, Raazi, The Harry Potter Series, Drushyam 2 மற்றும் Shrek போன்ற திரைப்படங்களை வழங்குகிறது.

இந்தச் சேவையானது, சில பிரீமியம் திரைப்படங்களை, அதன் பிரைம் வீடியோ சேவையில் வெளியிடும் முன், அதற்கான ஆரம்ப அணுகலையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் சந்தாதாரர்களை ஈர்க்க மேலும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. கூடுதல் கண்டெண்டுகளை உள்ளீடு செய்ய முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.